புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் தொழில் நுட்ப பயனறிவு பட்டறையும் பரிசளிப்பு விழாவும்.

நேற்று சனிக்கிழமை காலை அம்பாறை மாவட்ட புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் மழலைகளுக்கான தகவல் தொழில் நுட்ப பயனறிவு பட்டறையும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர். மு.இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் உரையாற்றுகையில்,

இன்று நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலைக்கு கடந்த யுத்தம், சுனாமி போன்ற அர்னத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது எம்மிடம் உள்ளது கல்வி ஒன்றே எனவே நாம் கல்வியில் கூடிய கவனம் எடுத்து எதையும் கல்வியால் சாதிக்க முடியும் என்பதை நிறுபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் கூடியளவு அக்கறையினை செலுத்த வேண்டும். எதிர்கலங்களில் இவ்வுலகம் தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் சுருங்கவுள்ளது. இப்படியான பாடசாலைகள் ஆரம்பிப்பது மட்டுமல்லாது பெற்றோர்கள் ஆசிரியர்கள் எமது மாணவர்களுக்கான கல்வியுடன் கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாத்து நடக்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.  எனவும் இப்படியான கல்வி, கலாசார முன்னேற்றமான விடயங்களுக்கு நான் என்றைக்கும் எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் எனவும் தெரிவித்தார்.