அரச சிறுவர் நாடகப் போட்டியில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை வெற்றியீட்டியுள்ளது


கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச நிறுவர் நாடக விழா – 2013 அகில இலங்கை ரீதியில் கொழும்பு ஜோன் த சில்வா அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி இன் தரம் 4, தரம் 5 மாணவர்கள் பங்கேற்று நடித்த 'உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவோம்' எனும் நாடகம் 3 வது இடத்தினைப் பெற்றுள்ளது. இதில் சிங்கம் வேடம் ஏற்று நடித்த ர.மிறோயிதன் மற்றும் கரடி வேடம் ஏற்று நடித்த இ.வானுஜன் ஆகிய மாணவர்களுக்கு சிறந்த நடிகர்களுக்கான விருது கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.