தேசிய வாசிப்பு மாத்தினை முன்னிட்டு மட்.செட்டிபாளையம் பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் விவாதப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) மட்.செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் விபுலானந்த மண்டபத்தில நடைபெற்றது.
இதன்போது வாசகர் வட்டத்தினால் தேசிய வாசிப்பு மாத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் தெரிவு செய்யபட்ட வர்களுக்கு பரிசில்கள் வழங்கபட்டதோடு மாணவர்களின் விவாதப் போட்டியும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) அவர்களினால் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் நூலகத்திற்கு அன்பழிப்புச் செய்யப்பட்டன.
வாசகர் வட்டத்தின் தலைவர் ஏ.சண்முகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா), கிழக்கு மாகாண சுகாரா மற்றும் சமூக சேவைகள் சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் கலாநிதி சி.அமலநாதன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மா.உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி வ.யாகேஸ்வரி, மற்றும் பாடசாலை அதிபர்கள் அசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள், வாசகர்கள், என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது வாசகர் வட்டத்தினரால் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களுக்கு அவரது சேவையினைப் பாராட்டி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.












