தரம் ஐந்தில் புலமைப்பரீட்சையில் சித்தியடைச்த மாணவர்களை கௌரவித்து பரிசு வழங்கும் நிகழ்வு கடந்த 12.11.2013 செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளி கோட்டத்தில் சொறிக்கல்முனை ஹோலி குரோஸ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அவர் அங்கு உரையாற்றுகையில் :
இந்த பாடசாலை 190 வருடங்கள் பழமைவாய்ந்த ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே பழமையான கட்டிடங்களை காணக்கூடியதாக உள்ளது யுத்த அனர்த்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது. இங்கே 06 மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்ததை பார்த்து பெருமைப்படுகின்றேன். இதற்காக முதலில் இப்பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் இந்த மாணவச்செல்வங்களின் தாய், தந்தையரையும் பாராட்டுகின்றேன். எமது கல்வியின் முன்னேற்றத்திற்கு கடந்த கால யுத்த அனர்த்தம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் எமக்கு இருக்கின்ற ஒரே தேவை இந்த நாட்டில் எமது இனமும் எந்த தடைகளுமின்றி முன்னேற வேண்டும் என்பதே.
இந்த பாடசாலைகளின் குறைகள் தேவைகள் பற்றி பாடசாலை அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பேன்.
இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்களாக வர வேண்டும் இதற்கு கல்வி தான் முக்கியமானதாக இருக்கின்றது. எமது மாணவர்களின் கல்வி உயர்ச்சிக்காக நான் தொடர்ந்தும் என்னாலான உதவிகளை செய்வேன் எனவும் கூறினார்.