சின்னப்பனங்காடு பாலர் பாடசாலைக்கு பிரதேச செயலகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.

(உ.உதயகாந்த்)

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் சின்னப்பனங்காடு கிராமத்தின் கிராம எழுச்சி பாலர் பாடசாலைக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் அண்மையில் பாலர் பாடசாலை கட்டிடத்தில்  நடைபெற்றது.

இவ்வைபவத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் அதிதியாகக் கலந்துகொண்டு பிரதேச செயலகத்தின் சார்பாக பாலர்களுக்கான பரிசுப்பொருட்களையும் கற்றல் நடவடிக்கைகளுக்கு அவசியமான காகிதாதிகள் மற்றும் உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உளவளத்துணை ஆலோசகர் ஏ.எம்.சப்ரினா, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், பிரதேச செயலாளரது மக்கள் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.லோகநாதன், ஏ.சந்திரசேன ஆகியோரும்  பாலர் பாடசாலையின் ஆசிரியைகளான பி.புலோமினா, எஸ்.தனுராயினி மற்றும் மாணவர்களது பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.