லீசிங் நிதி மோசடியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

பண மோச­டியில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் ஒரு­வரை எதிர்­வரும் 21ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஏ. யூட்சன் உத்­த­ர­விட்­டுள்ளார்.
சம்­பவம் பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
கல்­முனை வாடி வீட்டு வீதியில் இயங்கி வந்த நிதி நிறு­வ­ன­மொன்றின் முகா­மை­யாளர் அந்­நி­று­வ­னத்தின் ஊடாக குத்­தகை அடிப்­ப­டையில் முச்­சக்­க­ர­வண்டி, மோட்டார் சைக்கிள் என்­ப­வற்றை சில­ருக்கு பெற்றுக் கொடுத்து அம்­மக்கள் மாதாந்தம் செலுத்தும் பணத்தை தலைமைக் காரி­யா­ல­யத்­துக்குச் செலுத்­தாது இருந்­துள்ளார்.

இந்­நி­லையில், குறிப்­பிட்ட வாக­னங்­க­ளுக்கு குத்­தகை செலுத்­தப்­ப­ட­வில்­லை­யென தலைமைக் காரி­யா­ல­யத்­தினால் அறி­விக்­கப்­பட்டு அவை பறி­முதல் செய்­யப்­பட்­டன. இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்கள் கல்­முனை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.
அத­னை­ய­டுத்து குறிப்­பிட்ட நபர் பொலி­ஸா­ரினால் தேடப்­பட்டு வந்த நிலையில் அவர் சட்­டத்­த­ரணி மூலம் கடந்த 12ஆம் திகதி நீதி­மன்­றத்தில் சர­ண­டைந்தார். பின்னர் இவரின் சட்­டத்­த­ர­ணிகள் அவரை பிணையில் செல்ல அனு­ம­திக்­கு­மாறு சமர்ப்­பிக்­கப்­பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிபதி அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.