வவுணதீவுப் பிரதேசத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெறும் இடங்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இலங்கை சிறுவர் நிதியத்திற்கும் வவுணதீவப் பிரதேச இளைஞர் கழக பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்றது.
வவுணதீவில் அதிகம் சிறுவர் துஸ்பிரயோகம் எங்கு இடம்பெறுகின்றது எவ்வாறு இடம்பெறுகின்றது.என்பதை ஆராய்ந்து படிநிலைப்படுத்துவதுடன் அதனை நிவர்த்தி செய்வதற்க எடக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையர்ப்பட்டது.
இதனடிப்படையில் ஆராய்ந்து துஸ்பிரயோகங்கள் இடம்பெறும் இடங்கள் படிநிலைப்படுத்தப்பட்டதுடன் அவற்றை நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டடீ.
இக் கலந்துரையாடல்தி ங்கள் கிழமை புதுமண்டபத்தடி இளைஞர் தொழில் வழிகாட்டல் நிலையத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் சிறுவர் நிதியத்தின் தலைமையக அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை அதிகாரிகளான திட்ட முகாமையாளர் எல்.ஆர்.டிலிமா,திட்ட இணைப்பாளர் கே.கஜன்,திட்ட அதிகாரி ரி.சுபாஸ்,இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா.












