அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியம் நடாத்திய சாம ஸ்ரீ விருது வழங்கல் நிகழ்வு

கதிரவன் - 
அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியம் நேற்று சனிக்கிழமை திருகுாணமலையில் 20வது விருது வழங்கும் நிகழ்வினை நடத்தியது. புனித மரியாள் கல்லூரியில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த  115 சமூக சேவையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜிப் அப்துல் மஜீது, மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசனம் கிராமிய  மின்சாரம் நீர்வழங்கல் அமைச்சர் மீரா சாகிபு உதுமாலெப்பை கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.