இரண்டாம் தேசிய மொழி போட்டிப் பரீட்சையில் தேசிய ரீதியிலான போட்டிக்கு தெரிவான மாணவர்கள்

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அண்மையில் நடாத்திய தரம் 7 மாணவர்களுக்கான இரண்டாம் தேசிய மொழி பரீட்சையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் மாகாண மட்டப் போட்டியில் 1ம்,2ம் இடங்களில் வெற்றிபெற்று தேசிய ரீதியிலான போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில், "வாசிப்பு" போட்டியில் மாகாண மட்டத்தில் மார்க்கண்டு சிவானந்தராஜா (சின்ன உப்போடை, மட்டக்களப்பு) அவர்களின் புதல்வன் செல்வன்.சிவானந்தராஜா திவாகர்  1ம் இடத்தினை பெற்றுள்ளார்.

மற்றும், அமிர்தகழி,மட்டக்களப்பு - துரைராசசிங்கம் ஞானசேகரன்(ஆசிரியர்) அவர்களின் புதல்வன் செல்வன்.ஞானசேகரன் கிரிதர் "மொழிப் பிரயோகமும் கிரகித்தலும்" போட்டியில் மாகாண மட்டத்தில் 2ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

இவ் இரண்டு மாணவர்களும் அகில இலங்கை ரீதியில் கொழும்பில் நடைபெறவுள்ள போட்டிக்கு செல்லவுள்ளனர்.

இம் மாணவர்களுக்கு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் ஐ.கமல்ராஜ் அவர்களினால் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பதக்கமும், சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது இம் மாணவர்களை கற்பித்த ஆசிரியை பிரியங்கனி அவர்கள் அதிபரினாலும் ஏனைய ஆசிரியர்களினாலும் பாராட்டப்பட்டார்.

 செல்வன்.சிவானந்தராஜா திவாகர்

செல்வன்.ஞானசேகரன் கிரிதர்