(மோகன் )
ஆசியாவின் முதல் ஆச்சரியம்
வெண்டுத்தான் என்று சொல்லி ஆண்டு பல போயிரிச்சி
விளைஞ்ச பயிர் இன்னும் வீடு வந்து சேரல்லையே!
காத்திருந்து நானெடுத்தன் கவர்மெண்டு உத்தியோகம்
கர்வமாத்தான் இருந்தது கடிதத்த பார்க்கையில,
ரெயினிங்காம் ஆறு மாதம் அதன் பின்னர் நியமனமாம்
வணங்கிப் போகையில தெய்வமும் சொல்லலையே!
பல்லாண்டு ரெயினிங்கெண்டு
பயிற்சிக்குப் போன இடம் தந்த பாடம் கொஞ்சமல்ல,
வெள்ளமனதோடு வா என்க ஆருமில்ல,
வந்திருங்க என்டு சொல்ல வாங்கிற்கும் இடமில்ல,
மொத்தமாய் போனதால ஒத்த மதிப்பில்ல,
ரெண்டு நேரம் கையெழுத்து அதுக்குமட்டும் குறைவில்ல,
சோத்தப் பிரிக்கையில சோகந்தான் வருதப்பா
தாய நினைச்சி வலக்கண்ணு கலங்கையில
தாய்க்குப் பின் நினைச்சி இடக்கண்ணும் சேர்ந்திடுதே!
பக்கத்திலிருந்தவன் குழம்பெண்டு நினைச்சிடுவான்.
பட்டம் முடிக்கப்போய் படிப்ப மட்டும் பாக்காம
வயசுக்கும் கொஞ்சம் வளஞ்சு கொடுத்திட்டன்
வாழ்க்கைத் துணையென்று இளமைக்குக் கதை சொல்லி
இடியப்பச்சிக்கலோடு வீட்ட போகையில
கணக்குப் போட்டுக் காதலிச்சன் கடைசியில பிழைச்சிடுச்சி
பெத்த கடன் இன்னும் பேசாமல் தானிருக்கு
வளத்த கடன் வரம்பு மீறிப் போயிருச்சி
நான்பட்ட கடன் ஊர் முழுக்க இருக்கையில
மொத்தக்கடன் அடைக்க பல்லாண்டு உழைக்கணுமே!
எனக்கென்று வழி தேடி காதலுக்கு விடை சொல்லி
வாழத் தொடங்கையில மதியத்தால கிறிகிடுமோ!
முழுமாசச் சம்பளம் ஒரு மாசம் எடுக்கலாமோ
அடுத்த மாசம் லோணுக்கு ஆயத்தமாயிருக்கும்
சின்னச் சின்ன ஆசைகள கொஞ்சமாய் நிறைவேற்றி
கொஞ்சி விளையாட எனக்கொரு வாரிசுக்கு
அயல் நாடு செல்லணுமோ - என்று
அவள் கேட்க என்ன பதில் நான் சொல்ல
புற்று நோயாய் அரசியலும் சக்கரையோடு தலைவர்களும்
போட்டியொன்று நாம் வச்சா நரி கூடத் தோத்திடுமே
எங்க நிலை சொல்ல தெரிந்தவன் யாருமில்ல
அடுத்தபட்டம் பெற்றுவிட்டோம் 'பத்தாயிரப்பாட்டி' என்று
உண்மையச் சொன்னா ஆசியாவின் ஆச்சரியந்தான்
'ஐம்பதாயிரம் வேலையற்ற பட்டதாரி '
பொறுமைக்கும் எல்லையுண்டு - இந்த
ரெயினிங்கிக்கு இல்லையாப்பா?
K.Mohan

.jpg)