கல்­முனை பட்­ட­தாரி பயி­லு­நர்­க­ளுக்கு இம்­மாத சம்­பளம் இன்னும் இல்லை

கல்­மு­னையில் பட்­ட­தாரி பயி­லு­னர்­க­ளுக்­கான சம்­பளம் இது­வரை வழங்­கப்படா­துள்­ள­தாக பிர­தேச பட்­ட­தாரி பயி­லு­னர்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

கல்­முனைப் பிர­தே­சத்தில் கட­மை­யாற்றும் பட்­ட­தாரி பயி­லு­னர்கள் மிகுந்த சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யிலே பணி­பு­ரிந்து வரு­கின்­றனர். இவர்­களில் பெரும்­பாலானோர் வறுமை நிலைக்­குட்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.
இந்­நி­லையில், கல்­மு­னையில் பணி­பு­ரியும் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான 10 ஆயிரம் ரூபா சம்­ப­ளம் 07ஆம் அல்­லது 08ஆம் திக­தி­க­ளிலே வழங்­கப்­பட்டு வரு­வது வழ­மை­யாகும். இந்­நி­லையில் இம்­முறை 12ஆம் திக­தி­யா­கியும் தமக்­கான சம்­பளம் வழங்­கப்­ப­ட­வில்லை என விசனம் தெரி­விக்­கின்­றனர். இது தொடர்பில் கல்­முனை பிர­தேச செய­லகம் சென்று அங்கு தமக்­கான சம்­ப­ளத்­தினை வழங்­கு­மாறு பிர­தேச செய­லா­ள­ரிடம் முறை­யிட்­டுள்­ளனர்.
மேலும், தமது சம்பளம் இழுத்தடிப்பு செய்யப்படுவது தொடர்பாக பட்டதாரிகள் பிரதேச அரசியல் பிரமுகர்களின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்.