குறும்படங்கள் மற்றும் இசை காணொளிகளின் வெளியீட்டு விழா

மட்டக்களப்பை சேர்ந்த இளம் படைப்பாளிகளால் உருவாக்கப்பட்டுள்ள குறும்படங்கள் மற்றும் இசை காணொளிகளின் வெளியீட்டு விழா எதிர்வரும் 10ஆம் திகதி காலை 10 மணிக்கு மட்டக்களப்பு கோப் சென்ற்றர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

இதில் எம்மவர்களால் உருவான  நேர்கோடு, Suicide, நரகம்,வண்ண ஓவியம் ஆகிய குறும்படங்களும் மட்டு, காதல் சொன்னேன் ஆகிய இசை காணொளிகளும் திரையிடப்பட்டு வெளியிடப்பட உள்ளன.

மேலும் இவற்றின் இறுவட்டு வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
எமது கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக இடம்பெறவுள்ள இந்த நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
-குழு-






"நேர் கோடு" என்ற குறும்படம் எமது மட்டக்களப்பை சேர்ந்த இளம் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் முன்னொளி youtube இல் வெளியிடபட்டுள்ளது. மேலும் இக்குறும்படம் எதிர்வரும் 10ஆம் திகதி திரையிடப்பட்டு வெளியிடப்படவுள்ளது.


இக்குறும்படத்தில் தங்கவேல் சக்தியலிங்கம்,ஜெரோசன், திருமதி ஸ்ரீரதன் , கிஷோ ஆகியோர் நடித்துள்ளனர்.

இணை இயக்கத்தை தர்சன் நந்தகுமாரும், ஒளிப்பதிவை விவியன் ட்ரிசன், துஷ்யந்தா இளங்கோவனும் செய்துள்ளனர்.

மேலும் இதற்கான இசையை சஞ்சீத் லக்ச்மன் அமைத்துள்ளார்.

Editing, Posters, VFX ஆகியவற்றை துஷாந்த் பற்குணம்,ஷபேஷ், சிந்து, ரொஷான் , நிரோ ஆகியோரும் செய்துள்ளனர்.

இக்குறும்படத்தை காண்டீபா இளங்கோவன் எழுதி இயக்கியுள்ளார்.