(கல்முனை ஸ்ரீ ) அம்பாறை மாவட்டத்தில் 2011 ம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களினால் கொள்வனவு செய்யப்பட்ட பதின்மூன்று கோடி ரூபா பெறுமதியான நெல் பாவனைக்கு உதவாத விதத்தில் களஞ்சியங்களில் பழதடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றதுஅம்பாறை உகனை பொத்துவில் பானமை மகாஒயா தெகியத்தகண்டிய ஆகிய பிரதேசங்களில் களஞ்சயப்படுத்தப்பட்டுள்ள முப்பத்தி இரண்டு இலட்சத்தி பதினேழாயிரத்தி முன்னூற்றி இருபத்தியெட்டு கிலோ நெல் இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத விதத்தில் பழுதடைந்துள்ளது
இதன்படி சம்பா நெல் ஒரு இலட்சத்தி என்பத்திநாளாயிரத்தி ஐநூற்றி எழுபத்தி மூன்று கிலோவும் சாதாரண நெல் முப்பது இலட்சத்தி நூற்றி பன்னிரென்டாயிரத்தி பதிநான்கு கிலோவும் களஞ்சியங்களில் பழுதடைந்துள்ளது
இது தொடர்பாக இதற்கு பொறுப்பான அம்பாறை மாவட்ட செயலகத்தின் உயரதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது இவைகள் விற்பனை செய்வதற்காக கேள்வு மனு கோரப்பட்டதாகவும் அதனடிப்படையில் ஒரு வியாபாரி இதனை வாங்க முன்வந்த போதும் அந்நெல் மனித பாவனைக்கு உதவாத விதத்தி பழுதடைந்துள்ளமையினால் அதனை கெபள்வனவு செய்வதை நிராகரித்ததாகவும் தெரிவித்ததுடன் மிக விரைவில் இதனை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்












