பெரியகல்லாறு நியூவளர்மதி விளையாட்டுக் கழகத்தின் 27வது ஆண்டு நிறைவு விழாவும்
பரிசளிப்பும் கழக நாளும் கேக் வெட்டி வெகு சிறப்பாக 23.12.2013 திங்களன்று கல்லாறு இந்து கலாசார மண்டபத்தில் எஸ.;குகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
புனித அருளானந்தர் ஆலய பங்குத்தந்தை அருட்திரு ஜி.அம்புறோஸ் பங்கேற்புடன் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரனும் அதி விஷேட அதிதிகளாக மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.ருதேசன் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.ஞானராஜா கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் ஈ.மனோகரன் திட்டப் பொறியியலாளர் எம்.மனோஜ்குமார் நீர்பாசன பொறியியலாளர்கள் கே.சுசிதரன் சி.விவேக்சந்திரன் ஆகியோரும்,
விசேட அதிதிகளாக அதிபர்களான எஸ்.பேரின்பராஜா எஸ்.முருகானந்தம் கிராம உத்தியோகத்தர் ஆர்.ராதாகிருஷ்ணனும் கௌரவ விருந்தினர்களாக ஆலயங்களின் தலைவர்களான க.சீவரெத்தினம், எஸ்.செல்வராஜா கே.புவனேந்திரன ;ஆகியோரும் ஊடகவியலாளர்களான வி.கே.ரவீந்திரன் வி.கிருஷ்ணகுமார் ஆகியோரும் அரச கொந்துராத்துக்காரர் எம்.மாணிக்கராஜா, ஆர்.ஜி உரிமையாளர் கே.சுதர்சன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் கழக அங்கத்தவர்களின் சத்தியப் பிரமாணம், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கல், கற்ப்பித்த ஆசிரியர்களுக்கான பரிசுப் பொதி கழக உறுப்பினர்களின் விளையாட்டுச் சாதனைக்காகன வெற்றிக்கிண்ணங்கள் என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் மாணவர்களுக்கான உடன் பொது அறிவுப் போட்டியும் பார்வையாளர்களுக்கான போட்டியும் நடைபெற்று அதற்க்கான பரிசில்களும் வழங்கப்பட்டது. கலை நிகழ்வுகளில் சின்னஞ்சிறு சிறுமியொருவரின் நடனம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.












