மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 50வது மாநாடு சிறப்பாக நடைபெற்றது!

(சித்தாண்டி – நித்தி)
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 50வதுமாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


மாநாட்டு தலைவர் திரு.வ.ராஜதுரை அவர்களின் தலைமையில் இன்று(2013.12.07) காலை 9.00 மணியளவில் தோம்பூர் லயன்ஸ் நிலைய மண்டபத்தில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சால்ஸ் அவர்களும், சிறப்பு அதிதியாக  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எல்.பாஸ்கரன் அவர்களும், ஸ்ரீ லங்கா ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் திரு.டபில்ய10.எம்.பி.வீ.வன்னிநாயக்க அவர்களும் கலந்துகொண்டதுடன் உபதலைவர் திரு.ஏ.எஸ்.பசீட் அஹமட் அவர்களும்  கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்களும், உதவி பிரதேச செயலாளர்களும,கச்சேரியின் உயர் அதிகாரிகளும்  கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இம் மாநாட்டில் இவ்வாண்டில் உயிரிழந்த மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோத்தர் சங்கத்தின் அங்கத்தவர்கள், அவர்கள் சார்ந்த உறவுகள் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவகராக சேவையாற்றி இழைப்பாறிச் சென்ற 25 உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.