( நடனம் )நாவிதன்வெளிப் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள 60 பட்டதாரிகளுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளிப்பிரதேச செயலாளர் சு.கரன் தலைமையில் நாவிதன்வெளிப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை 11 மணிக்கு நடைபெற்றது.
பட்டதாரி பயிலுநர்களாக கடைமையாற்றி 60 பேருக்குமே அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் பியசேன மற்றும்அம்பாரைமாவட்ட மேலதிக அரச அதிபர் கே .விமலந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் அதேவேளை இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பனர் மற்றும் பிரதேச செயலாளர் சு.கரன் மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் ஆகியோர் பொன்னடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.




















