(சிவம்)பண்டிகைக் காலம் மற்றும் வருட இறதி விடுமுறை களிக்க வரும் உள்ளுர் உல்லாசப் பிரையாணிகளின் வருகை அதிகரிப்பின் காரணமாக மட்டக்களப்பு சந்தையில்; கால் இறாலகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் அதிக இறால் பிடிபட்ட கடந்த வாரங்களில் இறாலின் விலை குறைந்திருந்த போதிலும் தற்போது ஒரு கிலோ கால் இறால் ரூபாய் 1000 வீதம் விற்பனைசெய்யப்படுகின்றன.
தற்போது இறால் பிடிக்கப்படும் வீதம் குறைவாக உள்ளதும் மற்றும் வெளியிடங்களில் உள்ள வியாபாரிகள் நேரடியாக வந்து மீனவர்களிடம் கொள்வனவு செய்வதும் இதற்கு காரணமாக உள்ளன என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விலை அதிகரிப்பின் காரணமாக கடற்றெழிலில் ஈடுபடும் மீனவர்களும் வாவியில் இறால் பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
வாவித் தொழிலில் ஈடுபடும் 60 மீனவர்களும் ஒரு நாளைக்கு சுமார் 100 கிலோ வரையில் கால்இறால்கள் பிடீப்பதாகத் தெரிவித்தனர்.




















