கல்­முனை தமிழ் பிர­தேச செய­லகம் தரம் உயர்த்­தப்­ப­டா­விட்டால் சாகும் வரை உண்­ணா­வி­ரதம்

கல்­முனை தமிழ் பிர­தேச செய­லகம் தரம் உயர்த்­தப்­படா விட்டால் பிர­தேச செய­லக கூரையின் மீது ஏறி சாகும் வரை உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­ப­டுவேன் என கல்­முனை சுபத்­தி­ர­ராம விகா­ரையின் விகா­ரா­தி­பதி ரண்­முத்து கல­சங்க ரத்ன தேரர் தெரி­வித்தார்.
கல்­முனை வாழ் தமிழ் மக்­களின் நீண்ட காலக்­க­ன­வான கல்­முனை தமிழ் பிர­தேச செய­லகம் தரம் உயர்த்­து­வது தொடர்­பான சிவில் சமூ­கத்­தி­னரின் கூட்டம் பிர­தேச செய­ல­கத்தில் அண்­மையில் நடை­பெற்­றது. அதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
இக்­கூட்­டத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி அமைப்­பா­ளரும் ஜனா­தி­ப­தியின் இணைப்­பா­ள­ரு­மான அருண் தம்­பி­முத்து அம்­பாறை விகா­ரா­தி­பதி சன்­சீந்­தி­ரிய தேரர் உட்­பட பல முக்­கிய பிர­மு­கர்கள் கலந்து கொண்­டனர்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,
கல்­முனை வாழ் தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­பதில் நான் என்­றைக்கும் முன்­ன­ணி­யி­லேயே இருப்பேன்.
அந்த வகையில் கல்­முனை வாழ் தமிழ் மக்­களின் 25 வருடக் கன­வான தமிழ் பிர­தேச செய­லகம் தரம் உயர்த்­தப்­ப­டு­வ­தற்கு என் உயி­ரையும் தியாகம் செய்ய தயா­ரா­க­வுள்ளேன். அதனால் இப்­பி­ர­தேச செய­லகம் மீது ஏறி சாகும்­வரை உண்­ணா­வி­ரதம் இருக்­கவும் தயங்கப் போவ­தில்லை. தமிழ் மக்கள் எனக்கு ஆத­ரவு தந்தால் உங்­க­ளுக்­காக எதையும் செய்வேன்.
கடந்த 2004இல் ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்தின் போது அம்­பா­றைக்கு வந்த தமிழ் மக்­க­ளுக்கு பல உத­வி­களைப் பெற்­றுக்­கொ­டுத்தேன். எனது சேவை­யினை பார்த்த தமிழ் மக்­களே என்னை கல்­மு­னைக்கு வர­ழைத்­தார்கள் என்றும் கல்­மு­னைக்கு மக்­க­ளுக்கு சேவை செய்து வரு­கின்றேன்.
நான் கூட்­டங்­களில் கலந்து கொண்டு தெரி­விக்கும் கருத்­துக்­களை சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் திரி­வு­ப­டுத்தி செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றனர். அதனால் தமிழ் மக்கள் மத்­தியில் என்னைப் பற்றி தப்­ப­பிப்­பி­ராயம் வளர்ந்­துள்­ளது. தயவு செய்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் உண்­மை­களை வெளி­யிட வேண்டும்.
நான் ஜனா­தி­ப­தியின் இணைப்­பா­ள­ராக இருந்­தி­ருந்தால் கல்­முனை வாழ் தமிழ் மக்கள் இந்­த­ள­விற்கு கஷ்­டப்­பட வேண்டி இருந்திருக்காது உங்களது பிரச்சினைகளை தீர்த்து வைத்திருப்பேன். கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது தொடர்பில் எனக்கு ஏதாவது பிரச்சினை எழுமாக இருந்தால் தமிழ் மக்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.