மட்டக்களப்பு தளவாய் கிராமத்தில் கலாசார விழாவும் கௌரவிப்பு விழாவும்

மட்டக்களப்பு தளவாய் வளர்பிறை வீடமைப்புக்கூட்டுறவுச்சங்கமும், தளவாய் கிராம அபிவிருத்தி சங்கமும்  சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் அனுசரணையுடன் இணைந்து நடாத்திய கலாசார விழாவும் கௌரவிப்பு விழாவும்.இவ்விழாவானது மட்/தளவாய் விக்கினேஸ்வரா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் 01.12.2013ம் திகதி இடம் பெற்றது.

இவ்விழாவில் செங்கலடி பிரதேச செயலாளர் U.உதயசிறிதர், சட்டத்தரணி கா.ஜெகன்நாதன்,செங்கலடி வர்தக சங்கதலைவர் மோகன், பாடசாவை அதிபர்எஸ்.ரவிதேவன், கிராமஅபிவிருத்தி சங்கத்தின் தலைவர் N.மோகனராஜன்,செயலாளர் எஸ்.நிமல்ரூபன், பொருளாளர் P.மகராசா, தளவாய் வளர்பிறை வீடமைப்பு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் T.சிவராசா, மட்/கால்நடைவளர்போர் கூட்டுறவுச்சங்கத்தின் பொதுமுகாமையாளர் ம.நவறஞ்சன் , ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் ஞா சின்னராசா ஆகியோர் கலந்த கொண்டதுடன் கிராம செவகராக இருந்து ஓய்வு பெற்று தற்போது சட்டத்தரணியாக உயர்வு பெற்ற கா. ஜெகன்நாதன் அவர்களை செங்கலடி பிரசே செயலாளரினாலும்,முத்துமாரியம்மன் ஆலய தலைவர் அவர்களினாலும் பென்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வின்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.