ஆரையம்பதியில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு.

(ஹரி )
மண்முனைப்பற்று ஆரையம்பதி மற்றும் தாழங்குடா பிரதான வீதிகளில் கட்டாக்காலியாக திரிந்த மாடுகள் மண்முனைப்பற்று பிரதேசசபையினர்,மற்றும் ஆரையம்பதி சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் காத்தான்குடி பொலிசாருடன் இணைந்து இரவு கட்டப்பட்டுள்ளது.  பிரதேசசபையின் செயலாளர் திருமதி கா.ஜெ.அருள்பிரகாசம் அவர்களின் பணிப்பின் பேரில் கட்டப்பட்டன.  கட்டாக்காலி மாடுகள் பிரதேசசபையினால்; அடிக்கடி கட்டபட்டு மாடுகளின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடுவதும் குறிப்பிடத்தக்கது.