(நடனம்)
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்கும் போது தமிழ்,முஸ்லீம் மக்களின் உறவை பற்றி சிந்திக்காதவர்கள் இன்று கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்று கூறும் போது மட்டும் தமிழ்,முஸ்லீம் உறவைப் பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது என கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் அழகப்போடி விஜயரெட்ணம் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் அனைத்து அதிகாரமுடையதாக தரமுயத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்துகொண்டு ஊடகங்களில் விடுத்துவரும் அறிக்கைகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயெ அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்
அம்பாரை மாவட்டத்தின் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் சகல அதிகாரங்களுடனும் தரமுயத்தப்பட்டு வழங்கப்பட்டால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே விரிசல் நிலை ஏற்படும் என்று முஸ்லிம்காங்கிரஸின் தலைமையும் அதன் உறுப்பினர்களும் கூறிக்கொண்டிருப்பது தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்குமே தவிர தமிழ் மக்கள் மீது கொண்ட அக்கறையல்ல.
பழமைவாய்ந்த இப் பிரதேசத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பல துன்பங்களை அனுபவித்து வருகின்ற கல்முனைப் பிரதேச மக்கள் தங்களுக்கு தனியான பிரதேச செயலகப்பிரிவு தேவை என்பதற்காக கல்முனை வாழ் மக்களும், மதப் பெரியவர்களும் இணைந்து உயர் அதிகாரிகள் மற்றும் சகோதர இனத்தினைச் சேர்ந்த அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டவந்ததன் பிரகாரம் சகல அதிகாரம் உடைய பிரதேச செயலகமாக தரமுயத்தப்பட வேண்டும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை மற்றும் அதன் பிரதிநிதிகள் தரமுயத்துவதற்குத் தடையாக இருப்பது வேதனையாகவுள்ளது.
அதேவேளை தமிழ்ப்பிரதேச செயலகம் தரமுயத்தப்பட்டால் தமிழ்முஸ்லிம் மக்களிடையே விரிசல் நிலை எற்படும் என முஸ்லிம் தரப்புக் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது இவர்களின் கூற்றைப் பார்க்கின்றபோது தமிழ் மக்களின் இருப்பை பறிக்கும் செயற்பாடாகவே கருதமுடிகின்றது
கல்முனையில் மட்டும் தமிழ் முஸ்லீம் நிர்வாகங்கள் பிரிந்து இருப்பது விரிசலை ஏற்படுத்தும் என்று கூறும் முஸ்லிம் தலைமைகள் கிழக்கு மாகாண சபையில் தமிழ் ,முஸ்லீம் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அழைப்புவிடுத்த போது அதை மறுத்த முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது. அன்று தன் கட்சி நலன்களுக்காக ஒட்டுமொத்த தமிழ்,முஸ்லீம் சமூகங்களுக்கு இடையேயும் விரிசலை ஏற்படுத்தும் செயற்பாட்டினை செய்தவர்கள் இன்று தமிழ்,முஸ்லீம் உறவைப்பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது.
உண்மையிலேயே தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசல் ஏற்படக் கூடாது என முஸ்லீம் தலைமைகள் நினைப்பார்களேயானால் தமிழ் மக்களுக்கு உரிமையான கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கொடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.