இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தினால் புலமையாளர் பாராட்டு நிகழ்வு


இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் அகிலன் பவுண்டேசன் நிறுவனத்துடன் இணைந்து பட்டிருப்பு வலயத்தில் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 136 மாணவர்களையும் கற்பித்த 64 ஆசிரியர்களையும் பாராட்டிக்கௌரவிக்கும் விழா கழுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கடந்த வெள்ளியன்று மாலை சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா ஞா.கிருஸ்ணபிள்ளை கோ.கருணாகரம் அகிலன்பவுண்டேசன் இலங்கைக்கான இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் ஸ்தாபகர் எம்.கோபாலகிருஸ்ணன் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் மட்டு.மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.பாஸ்கரன் சுகாதார வைத்திய அதிகாரி சா.இராஜேந்திரன் சங்கப் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்துசிறப்பித்தனர். ஆசிரியர் மற்றும் மாணவர்க்கு சான்றிதழ்களுடன் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை.