சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் க.பொ.த (சா.த)மாணவர்களுக்கு இலவச கல்விக் கருத்தரங்கு

நடனம் -
துறைநீலாவணை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமையத்தின் (SEEDO)  ஏற்பாட்டில் இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு இரு தினங்கள் நடைபெற்றது.
அமையத்தின் தலைவர் நில அளவையாளர் எஸ். மன்மதராஜாவின் தலைமையில் துறைநீலாவணை மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை தமிழ் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை கணிதப் பாடமும் நடைபெற்றது.

இக்கருத்தரங்கின் வளவாளர்களாக ஆசிரிய ஆலோசகர்களான கே.குணசேகரம், எஸ்.இராசலிங்கம் மற்றும் வி.மதிவண்ணன் ஆசிரியர் ஆகியோர் முன்னெடுத்து நடத்தியதுடன், இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுக்கு மத்திய கல்லூரியின் அதிபர் ரீ.ஈஸ்வரன் கலந்துகொண்டதுடன் துறைநீலாவணை உட்பட அயல் கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.