சர்வதேச வலது குறைந்தோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு நேற்று (04) வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றது.
கன்டிக்கப் இன்டநெஸனல் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் த.பகீரதன் தலைமையில் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்கள பணிப்பாளர் ச.குணரெட்ணம் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலது குறைந்த சிறுவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் விளையாட்டு நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் போன்றன இடம்பெற்றது.












