பெரியகல்லாறு வாசகர் வட்டத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் 27ந் திகதி வெள்ளிக்கிழமை பொது நூலக கேட்போர் கூடத்தில் ஞா.அற்புதராஜா
தலைமையில் நடைபெற்றது. அத்துடன் நூல் கண்காட்சியும் நடைபெற்றது. மாணவர்களும் பொது மக்களும் பயன்பெறும் வகையில் இந் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவும், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசாவும், ஆங்கில தேசிய பாடசாலை இயக்குனர் ஜெ.இராகுலன் கிழக்குப் பிராந்திய செயலாற்று முகாமையாளர் செ.கனகசுந்தரம் ஆகியோருடன்.
கௌரவ அதிதிகளாக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.கருணாநிதி, ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் க.சீவரெத்தினம், ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தலைவர் சி.செல்வராசா சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.கே.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வின் சிறப்பம்சமாக முந்நாள் நூலகர் ஜவ்பர் தேசிய ரீதியாக வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் கேடயத்தை தற்போதைய நூலகர் திருமதி வா.சதாகரனிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் மாற்றலாகிச் சென்ற நூலகருக்கான பாராட்டுப் பத்திரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
புதிய பெறுமதியான புத்தகங்களின் கண்காட்சியை அதிதிகள் பார்வையிட்டனர். அதில் பெரியகல்லாற்றைச் சேர்ந்த படைப்பாளிகளின் புத்தகங்களுக்கும் இடமளிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வண்ணக்கர் க.சீவரெத்தினம் உரையாற்றுகையில் உள்ளுர் ஊடகவியலாளர்கள் ஓதுக்கப்படாமல் அவர்களும் நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட வேண்டியது அவசியமாகும். கல்லாறு பாரம்பரியங்களைப் பன்னெடுங்காலமாக பேணிவரும் ஒரு கிராமமாகும். உரியவர்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களுக்கு கௌரவம் அளிக்கின்ற பண்பை கடைப்பிடிக்கின்ற கிராமம் என்பதில் நாம் பெருமை கொள்ளுகின்றோம். என்று குறிப்பிட்டார்.
பிரதம அதிதியும் பாராறுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தனதுரையில். பெரியகல்லாறு வாசிகசாலை எம்மால் சாக்கு கொட்டகையில் கலைக் கழகம் என்ற பெயரில்; ஆரம்பிக்கப் பட்ட ஒன்றாகும். 1977ல் மாடிக்கட்டடத்தில் இயங்குவதற்கு வழி சமைத்தவர் முன்னாள் தமிழர் விடதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அமரர் சி.கணேசலிங்கமாகும். இன்று இந்த வாசிகசாலை மட்டக்களப்பு அம்பாரை மாவட்டத்திலேயே 2012 க்கான தேசிய வாசிப்பு மாத போட்டியில் தேசிய ரீதியில் விருது பெற்றிருப்பது பெருமைக்குரியதாகும். இதற்காக உழைத்தவர்கள் பாராட்டக்குரியவர்கள். இத்தகைய ஒரு சிறப்பான நிகழ்வில் திகதியும் ஒதுக்கிக் கொடுத்துவிட்டு இத் திணைக்களத்தின் உயரதிகாரிகள் கலந்த கொள்ளாமல் விட்டது கவலை தரும் விடயமாகும்.
உயரதிகாரிகள் கட்டளையிடுவதோடு மட்டும் நின்று விடாமல் கண்காணிப்பதிலும். நிகழ்வுகளில் கலந்து கொண்டு அவதானிப்பதிலும் கூடிய கவனம் செலுத்தும் போததான் அந்த நிறுவன உத்தியோகத்தாகள் சிறப்பாகச் செயற்படுவார்கள். இந்த நூலகர் திருமதி சதாகரனும் முன்நாள் நூலகர் மு.ஜவ்பர் ஆகியோரின் சிறப்பான தேடல்களுடன் செயற்பட்டவர்கள். தேசிய விருதுக்காக முயற்சித்து இலக்கை அடைந்துள்ளவர்கள். இதற்காக அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அந்த வகையில் மாற்றலாகிச் சென்றுள்ள ஜவ்பருக்கு இங்கு பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தமையானது மகிழ்ச்சி அளிக்கின்றது. இது தமிழ் முஸ்லிம் உறவை வலுப்படுத்துகின்ற ஒரு விடயமாகும். முன்பு முஸ்லிம் மக்களுக்கு கல்வி புகட்டுவதில் கூடிய பங்களிப்பைச் செய்தவர்கள் தமிழ் ஆசிரியர்களாகும். இதை முஸ்லிங்களே ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். ஆனால் இன்று முஸ்லிம் ஆசிரியர்கள் எமது பிரதேசங்களில் கல்வி புகட்ட வருகின்றாhகள். இது தமிழ் முஸ்லிம் உறவை மேலும் வளர்த்தெடுக்க உதவும்.
இந் நிகழ்வில் தேசிய வாசிப்பு மாத விருது வழங்;கலும் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. இந் நிகழ்வுகளானது மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய வாசிப்பு மாதத்திற்கு முழுமை சேர்க்கின்றது. இதற்கான பங்களிப்புக்களை கிராம மக்களே மேற்கொண்டுள்ளமையானது சிறப்பம்சமாகும்.












