திருகோணமலையில் காணாமல் போனவர்களை தேடியறியும் குழு நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தை இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தி கலைத்தனர். இதன்போது அக்குழுவின் தலைவர் தாக்குதலுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத் தாக்குதலில் மூதூர் பிரதேச சபையின் முன்நாள் தலைவர் க.திருச்செல்வமும் தாக்குதலுக்கு உள்ளாகி பொது மருததவ மனையில் சிகிற்சை பெற்று வருகின்றார்.












