மனித அபிவிருத்தி தாபன கிராமமட்ட சிறுவர் குழுக்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு


(வி.ரி.சகாதேவராஜா)
மனித அபிவிருத்தி தாபன கிராமட்ட சிறுவர் குழக்களின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் தாபனத்தின் மகளீர் உத்தியோகஸ்தர் திருமதி.வீ.இராணி தலைமையில் நடைபெற்றது.

இவ்வருடாந்த ஒன்றுகூடல் மகாநாட்டிற்கு அதிதிகளாக கல்முனை, சம்மாந்துறை சிறுவர் நன்னடத்தைப்பிரிவின் சிறுவர் மேம்பாட்டு உத்தியோக்ஸதர்களான் எம்.என்.எம் றபாஸ் மற்றும் ரி.மதிழயகன், எஸ்விஜிதரன் ஆகியோரும் காரைதீவு பிரதேச செயலகத்தி;ன் முன்பராய சிறுவர் உத்தியோகஸ்தரான எஸ்.பிரோமாவதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்வருடாந்த சிறுவர் மகாநாட்டின் விசேட அம்சமாக மனித அபிவிருத்தி தாபனத்தின் கிராமமட்ட சிறுவர்குழுக்களுக்கு கடந்த காலங்களில மாவட்டத்தை தழுவிய பொது அறிவுப் போட்டி நடாத்தப்பட்டது. .. இப்போட்டியில் முதல் இடங்களை பெற்ற 13 போட்டியாளர்களை தெரிவு செய்து இவர்களுக்கான மாபெரும் இறுதிப்போட்டியும் நடைபெற்றது. ...

இப்போட்டியில் மூன்று சுற்றுக்களிலும் துறைநீலாவனை சிறுவர்குழுவின் அங்கத்தவர் ஆர்.ஜனார்த்தனி 100 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார். 2ஆம் 3ஆம் இடங்களை கல்முனை சிறுவர் குழு அங்கத்தவரும் நிந்தவுர் சிறுவர்குழு அங்கத்தவரும் பெற்றுக் கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்குழு அங்கத்தவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது.

இவ்வருடாந்த ஒன்றுகூடலில் மனித அபிவிருத்தி தாபன இலக்குப்பிரதேசத்தின் 10 சிறுவர்குழுக்களின் அங்கத்தவர்களும், மகளீர் குழக்களின் தலைவிகள் உட்பட மனித அபிவிருத்தி தாபனத்தின் உத்தியோகஸ்தர்கள்,தொண்டர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.