சித்தாண்டி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும் திருவெம்பாவை விழா
சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் திருவெம்பாவை விழாவானது இவ்வருடமும் ஆலயத்தின் குருக்கள் சிவ ஸ்ரீ குகன் அவர்களினால் பாவை விழாவுக்கான பூசைகள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.
அதிகாலையிலே சிறுவர்கள் சிறுமியர்கள் மற்றும் பெரியவர்கள் என அதிகமானோர்கள் ஒவ்வொரு நாளும் வருகைதந்து பாவை விழாவில் கலந்துகொள்வது மட்டுமின்றி திருவெண்பா பாடல்களை பக்தி சிரத்தையுடன் ஒன்று சேர்ந்துபாடி பக்கிதியில் ஆழ்த்துகின்றனர். இங்கு நடைபெறும் ஒவ்வொரு நாள் பூசையும் கிராமத்தில் இருக்கும் மக்களினால் ஒன்றுசேர்ந்து நடாத்தப்படுகின்றது குறிப்படத்தக்கது.
சித்தாண்டி பிரதேசத்தின் நான்கு பிரிவுகளிலும் அமைந்துள்ள ஒவ்வொரு ஆலயங்களிலும் அதிகாலையிலே திருவெண்பாவை பக்தி கீதங்கள் ஒலிப்பதனால் கிராமே ஓர் பக்திமயமாக இருப்பதுடன் பக்தி தழுவ விருப்பதுடன் அதிகமானோர்கள் கலந்துகொள்கின்றார்கள்.
நாளை (2013.12.14) அதிகாலை 7.41 மணியளவில் மார்கழி பிறப்பை முன்னிட்டு விசேட பூசையும் வழிபாடுகளும் மிகவும் சிறப்பாக நடைபெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












