(வ. வினோதன்)முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தினர் வருடாவருடம் ஆலயத் திருவிழாக்களை முன்னிட்டு பாரம்பரிய வடமோடி, தென்மோடிக்கூத்துகளை ஆடி அரங்கேற்றம் செய்து வருவது வழக்கம். அந்தவகையிலே இந்தவருடம் "அனுருத்திரன்" எனும் தென்மோடிக்கூத்து தொடக்கநிகழ்வு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்துசமய மரபுக்கமைய (16.12.2013) இன்றைய சுபநாளில் மடை வைத்து மூத்த கூத்துக்கலைர்களின் முன்னடத்தலில் இளம்கலைர்களைக் கொண்டு அண்ணாவியர் பரமக்குட்டி கதிர்காமநாதன் அவர்களின் தலைமையில் ஆடப்பட்டது
கடந்த வருடங்களில் நல்லதங்காள் சரித்திரம், அலங்காரரூபன், சராசந்தன்போர், கும்பகர்ணன் வதை, நிர்முகன்வதை, பகாசூரன்சண்டை, பப்புரவாகன் நாடகம், உலகநாச்சி போன்ற கூத்துக்களை ஆடி அர்ங்கேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்

















