
(ஜனாதீபன்)
ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத பட்டதாரி பயிலுனர்களுக்காக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று புதன் கிழமை ஏறாவூர் நகர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் முகமட் ஹனிபா தலைமையில் நடைபெற்றது.
இதன் போது 26 பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எ.சி ரனிஸா,கணக்காளர் எஸ்.எச் நைபிக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேஸ்,நிர்வாக உத்தியோகத்தர்,எம்.எஸ்.எம்.ரவூப்,கிராம சேவகர் பிரிவு நிருவாக உத்தியோகஸ்தர்,ஜி.கிருபாகரன் போன்றோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.



.jpg)


















