இவ் 'பாதைகள்' எனும் வீதி நாடகதை நிகழ்வு அண்மையில் வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இளைஞர்களைச் சேர்த்துக்கொள்ளும் பிரச்சாரச் செயற்பாட்டிற்கான நிதியுதவியை WUSC 'வூஸ்க்' எனப்படும் 'உலக கனேடிய பல்கலைக்கழக சேவை' வழங்கி இருந்தது.
இச் செயற்திட்டத்தை மட்டக்களப்பு சர்வோதயம் இணைப்பாக்கம் செய்து வழிநடத்தியது. இவ் வீதி நாடகத்தை அ.விமலராஜ் அவர்கள் நெறிப்படுத்தி இருந்தார். கிழக்குப் பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்கள் இதில் பங்குபற்றி இருந்தனர்.













