மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சக்தி வேலைத்திட்டம்.

(மா.சசி)
இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பவற்றினுடாக மாவட்ட ரீதியாக நடாத்தப்படும் இளைஞர் சக்தி வேலைத்திட்டம் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடாக செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்களில் எதிர்காலத்தில் இளைஞர்களின் தற்போதைய தேவையினைக் கருத்தில் கொண்டு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றி ஆராயும் வேலைத்திட்டமாகவே இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையில் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத் தலைவர் மற்றும் பிரதிநிதிகள்,பிரதேச சம்மேளனத் தலைவர்கள் மற்றும் பிரத்நிதிகள் கலந்துகொண்டனர்.