(மா.சசி)
இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு ,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பன இணைந்து நடைமுறைப்படுத்திய யூத் ஸ்ரீ லங்கா வீடமைப்புத்
திட்டத்தின் கீழ் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மானிக்கப்பட்ட வீடு நேற்றுத் திங்கள் கிழமை திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
வாகரைப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எஸ்.யுவராஜ்குமார் தலைமையில் இடம்
பெற்ற இத் திறப்பு விழாவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட
உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டு திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.எச்.உமர்லெப்பை உட்பட கிராம
சேவை அதிகாரி,மாவட்ட,பிரதேச சம்மேளன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.












