மாவட்ட விவசாயிகளின் மாகாநாடு நேற்று 8ம் திகதி மட்டக்களப்பு மாநகர சபை கேட் போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி பிரத்திப் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், மற்றும் மாவட்டத்திலுள்ள 14 பிரதேசங்களிலுமுள்ள விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாய செயற்குழுவுக்கு 14 நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அடுத்து வரும் செயற்குழு கூட்டத்தில் மாவட்ட விவசாய சங்கத்திற்குரிய நிருவாகிகள் தெரிவு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டின்போது மாவட்ட விவிசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த மீள்குடியேற்றப் பிரதியமைசர் விநாயகமூர்த்;தி முரளிதரன் அவர்கள்: 2014 ஆம் அண்டு வரவு செலவுத் திடத்தில் விவிசாயிகளுக்கு ஓய்வூதியம், மானியவிலையில் உரம், களஞ்சியவசதி போன்ற பல நலத் திட்டங்களை ஜனாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிகூட ஒரு விவசாயிதான் அதனைக் கருத்திற் கொண்டே வேறு எந்த ஒரு அரசாங்கமும் வழங்காத பல சலுகைகளை இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
இந்த வரவு செலவத் திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் நிட்சயம் முன்நேற்றமடையும் என அவர் இதன்போது தெரிவித்தார்.












