இன்று உலக ஜனநாயக நாடுகளில் சட்டத்துறைக்கு அடுத்ததாக ஊடகத் துறையே முக்கியத்துவம் பெறுகின்றது. ஊடக தர்மம் ஒழுங்காகப் பேணப்படுவதாலேயே இந்த முக்கியத்துவத்தை ஊடகத்துறை அடைந்துள்ளது. எனவே ஊடகம் என்பது சமூகத்தை நேசித்து வழிப்படுத்தி இயக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
மேற்கண்டவாறு மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்டபத்தில் வற்றி நியூஸ் (BATTINEWS.COM) இணையத்தள குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தமிழ் பிரிவு சிரேஷ்ர நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ். மோசஸ் தெரிவித்தார்.
ஊடகம் என்பது பல அர்த்தங்களைக் கொடுததாலும் கூட அது சமூகம் சார்ந்த ஒன்றாகும். எனவே ஊடகம் என்பது சமூகத்தை சரியான வழியில் இயக்குவதற்கான நெறிப்படுத்துவதற்கான ஒரு தலை சிறந்த சாதனமாகும். சமூக அறமே ஊடக அறமாகவும் இருக்கின்றது.
ஒரு இயக்குனர் ஒரு கருவை அல்லது செய்தியை வைத்துக் கொண்டு கதையை உருவாக்கி ஒற்றைக் கண்ணால் கமராவைப் பார்த்து இரண்டு மணித்தியாலங்களுக்கு காண்பிப்பதற்காக ஒரு படத்தை தயாரித்து வெளியிடுகின்றார். ஒரு தனிநபர் ஒரு கண்ணால் பார்த்து உருவாக்கிய படத்தை இரு கண்களால் இலட்சக் கணக்கானோர் பாhவையிடுகின்றனர். இதேபோல் தான் ஊடகவியலாளரும் செயற்படுகின்றார். சமூகத்தின் கண்ணைத் திறக்கின்றார். எனவே அவரின் பணி சமூகத்திற்கு இன்றியமையாததொன்றாக இருக்கின்றது.
எனவே முற்றிலும் சமூகம் சார்ந்த பணியில் அவன் தன்னை அர்ப்பணித்து சுயநல நோக்க அடிப்படையில் செயற்படாது சமூகத்திற்கான உன்னத சேவையைச் செய்ய வேண்டிய கடப்பாடும் பொறுப்பம் அவனையே சார்ந்து நிற்கின்றது. எனவே ஒரு சமூக வெளிப்பாட்டு தளத்தில் இருந்து செயற்படுவதால் அவனுடைய பொறுப்புக்கள் மிக அதிகமாவவே இருக்கின்றது. அவ்வாறு செயற்படாவிட்டால் அது சமூகப் பிறழ்வுகளுக்கான ஏது நிலையை ஏற்படுத்தி விடும்.
சமுகத்தை நேசிக்கும் ஒருவன் சமூகத்தை நல்வழிப் படுத்துவதற்காக நாளைய சமூகம் நல்ல முறையில் வாழ வேண்டுமென்பதற்காக இன்றைய சமூகம் சிறப்பாக வாழ வேண்டுமென்ற எண்ணத்தோடு கடந்தசால அனுபவங்களையும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் உள்வாங்கி அத்தகையவற்றை நீக்கி அவை நாளைய சமூகத்திற்க இட்டுச் செல்லப்படக் கூடாது என்ற உயர்ந்த நோக்குடன் செயற்படுவதே அவனது இலக்காக இருக்க வேண்டும்.
சிறகே இல்லாத ஒரு பூங்குருவி வானத்தில் பறக்கின்றது என்றொரு பாடல் இருக்கின்றது. சிறகே இல்லாமல் அது எவ்வாறு பறக்க முடியும்? அதே போல்தான் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனம் இல்லாமல் உயர்ந்துவிட முடியாது. எனவே ஒவ்வொரு ஊடகவியலாளரும் தாங்கள் பயன்படுத்தும் ஊடகமே தங்கள் சிறகு என்பதை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
என அவர் தெரிவித்தார்.












