சோட்டாக்கன் கராத்தே கழகத்தின் ஏற்பாட்டில் சாதனையாளர்கள் கௌரவிப்பு

(உ.உதயகாந்த்)

மட்டக்களப்பில் இயங்கிவரும் சோட்டாக்கன் கராத்தே கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் சாதனைபுரிந்த சாதனையாளர்களை கௌரவிக்குமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது கழகத்தின் தலைவர் கே.பாஸ்கரன் தலைமையில் 29.12.2013 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்/வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் மண்டபத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதி ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் நிகழ்வில் கிழக்குமாகாண விளையாட்டுத்துறை மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அமலநாதன், மாவட்ட அரச அதிபர் திருமதி சாள்ஸ் , கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் தர்மரெட்ணம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செழியன் , வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து  சர்வதேச மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறுபட்ட துறைகளிலும் சாதனைபுரிந்த மாணவர்கள் மற்றும் சாதனையாளர்களும் அதிதிகளால் நினைவு சின்னங்களும் சான்றிதள்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கராத்தே கலையில் சாதனையாளர்களும், பயிற்றுவிப்பாளர்களும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டார்கள்.