ஆலையடிவேம்பில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் நலன்புரி வேலைத்திட்ட நிகழ்வு

(உ.உதயகாந்த்)

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்திப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் நலன்புரி வேலைத்திட்ட நிகழ்வானது பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று 18.12.2013, புதன்கிழமை நடைபெற்றது.


ஆலையடிவேம்பு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், ஆலையடிவேம்பு சமுர்த்தி மகா சங்கப் பணிப்பாளர் ரீ..பரமானந்தம், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திருமதி.      அருந்ததி மகேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பங்குபற்றிய இந்நிகழ்வு இறைவணக்கத்தோடு ஆரம்பமாகி சமுர்த்தி தலைமையக முகாமையாளரின் ஆரம்ப உரை, பிரதேச செயலாளரின் சிறப்புரை, சமுர்த்தி மகா சங்கப் பணிப்பாளரின் விசேட உரை ஆகியவற்றைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் உதவிகளும் பிரதேச செயலாளர் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்களால் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.