( ரவிப்ரியா )
கல்முனை தமிழ்பிரதேச செயலகம் அமைந்தால் தமிழ் முஸ்லிம்களிடையே முரண்பாடு வலுக்கும். பிரிவினை ஏற்படும். என்றெல்லாம் பத்திரிகைகள் மூலம் அறிக்கைகள் விடும் எமது அன்பின் முஸ்லிம் அரசியல் தலைவர்களே உங்கள் அறிக்கைகளை அவதானித்தால் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் ஒரு சதி நடவடிக்கைபோலவே புலப்படுவது மட்டுமல்ல இன முரண்பாட்டை தோற்றுவித்;து அதன்மூலம்; அப்பாவி முஸ்லிம்மக்களின் அரசியல் ஆதரவினைப் பெறமுயற்சிக்கும் ஒரு தந்திரோபாயத்திட்டம் என்று கூட எண்ணத்தோன்றுகின்றது.
மேற்கண்டவாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா கல்முனை தமிழ் பிரதேச செயலகம்; அமைக்கும் முயற்சிக்கு முஸ்லிம் தலைவர்களிடமிருந்து எழுந்துள்ள எதிர்ப்பலைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனவே தயவு செய்து அரசியல் வளர்க்கவேண்டும் என்று நினைத்து இனங்களுக்கிடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் அறிக்கைகளை விடுவதையோ அல்லது பேசுவதையோ தவிர்த்து தாங்கள் சார்ந்த மக்களுக்கு வேண்டிய நல்ல சேவைகளைச் செய்வது சாலச்சிறந்தது. கல்முனை தமிழ் உபபிரதேசசெயலகமானது கல்முனை தமிழ் பிரதேசசெயலகமாக தரம் உயர்வதனால் ஏன் இந்த அடிப்படையில்; இனமுரண்பாடுகள் வரவேண்டும் என்பதனை இவ்வாறான அறிக்கை விடுபவர்கள் தெளிவாக திறந்த மனதுடன் தெரியப்படுத்தல் வேண்டும்.
தமிழ் மக்களும் முஸ்லிம்மக்களும் இன்று நிம்மதியாக சந்தோசமாக சகோதரத்துவத்துடன் இங்கு வாழ்கின்றனர்.அவர்களுக்கிடையில் எந்தவிதமான விரிசல்களுமில்லை. திறந்தமனதுடன்தான் வாழ்கின்றனர். இந்நிலையில் கல்முனையைபிரித்தால் முரண்பாடு வலுக்கும் என எச்சரிக்கும் அரசியல் வாதிகளின் செய்திகளைப்பார்த்து அதிர்ந்து போனோம். காரணம் இவர்கள் யாரை எச்சரிக்கின்றார்கள்? ஏன் எதற்காக எச்சரிக்கை விடவேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர்கள் தெளிவுபடுத்தவேண்டும்.
உண்மையில் தமிழர்கள் எதிர்பார்க்கும் நியாயமான கோரிக்கை என்னவென்றால் ஏற்கனவே உபதமிழ்பிரதேசசெயலகமாக நீண்டகாலமாக தனித்தியங்கும் கல்முனை தமிழ் உபபிரதேசசெயலகத்தினை தரமுயர்த்தி அதனூடாக அரசசேவையினை விரிவுபடுத்தி மக்கள் துரிதமான சேவையைப் பெறவேண்டுமென்ற நல்ல நோக்கத்திற்காகவே தனித்தமிழ் பிரதேசசெயலகம் என்ற நிர்வாககட்டமைப்பை எதிர்பார்க்கின்றனர் ஆனால் தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைக்கவேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக மட்டுமே ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள் இத்திட்டத்தினை எதிர்ப்பது போன்று ஒரு நடவடிக்கையினை ஏற்படுத்தி அதனூடாக அவர்கள் சார்ந்த மக்களிடம் செல்வாக்கைப் பெறமுயற்சிக்கின்றனர். எனவே தயவு செய்து தமிழ் முஸ்லிம் மக்களைப்பிரிக்கும் சதியில் அரசியல்வாதிகள் ஈடுபடுவதனை எந்தச்சமுகமும் இனிமேல் ஏற்றுக்கொள்ளாது. அதே போன்று எந்தச் சதியிலும் எமது இரு இனமக்களும் சிக்கமாட்டார்கள் என்பதனையும் தெளிவாகப் புரிந்து கொண்டால் மிக நன்று.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கரையோர மாவட்டம் கேட்கின்றனர். எந்த தமிழ் கட்சிகளோ அல்லது தமிழ்மக்களோ இதுவிடயமாக எதுவித எதிர்கருத்தும் வெளியிட்டார்களா? இல்லையே. அதேபோன்று மட்டக்களப்பு மத்தி என்று தனி முஸ்லிம் பாடசாலைகளை மையப்படுத்தி அமையப்பெற்றுள்ள மட்டக்களப்பு மத்திகல்விவலயம் இனமுரண்பாட்டைத்தோற்றுவிக்கும் என்று எந்த தமிழ்அரசியல்வாதிகளோ அமைப்புக்களோ எதிர்கருத்துககளைக் கூறித் தடு க்க நினைத்தார்களா? இல்லையே. ஏன் நீங்கள் தமிழ் பிரதேசசெயலகம் ஒன்று உருவாவதை தடைசெய்ய எத்தனிக்கின்றீர்கள்? இதனால் முஸ்லிம்மக்களுக்கு ஏற்படும் தீமைதான் என்ன?
எனவே தயவுசெய்து இப்படியான இனவிரோத கருத்துக்களைக்கூறும் அரசியல் தலைவர்களே தயவு செய்து தமிழ்மக்களின் மனங்களை புண்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு மக்களிற்கு நல்லவை நடக்க தங்களின் ஆதரவை வழங்குங்கள் அதுதான் நல்ல அரசியல்வாதிகளின் பண்பாடாகும்.