க.​பொ.த (சாதாரண தரம்) பரீட்சை முடியும்வரை மேலதிக வகுப்புகள் நடாத்த தடை

எதிர்­வரும் 10 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்­சைக்குத் தோற் றும் மாண­வர்­களின் பரீட்சை மீட்­ட­லுக்குத் தடை­யாக அமையும் செயற்­பா­டு­களை பரீட்­சைகள் திணைக்­களம் தடை­செய்­துள்­ளது.

நேற்று 4ஆம் திகதி நல்­லி­ரவு முதல் க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை நிறை­வு­பெறும் வரை இப்­ப­ரீட்சை தொடர்பான மேல­திக வகுப்­புக்­களை நடத்­துதல், மாதிரி வினாப்­பத்­தி­ரங்­களை அச்­சிடல் அதைப் பார்­வைக்கு வைத்தல், சுவ­ரொட்­டி­களை ஒட்­டு தல், பதா­​தைகளை தொங்­க­வி­டுதல் மற்றும் ஊடக விளம்­ப­ரங்­களைக் காட்­சிப்­ப­டுத்தல் போன்ற நட­வ­டிக்­கைகள் முதல் தடை ­செய் ­யப்­பட்­டுள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­க­ள த்தின் ஆணை­யாளர் ஜயந்த புஷ்­ப­கு­மார அறி­வித்­துள்ளார் 48 பாடங்­க­ளுக்­காக எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­படும் க.பொ.த சாதா­ர­ண­தரப் பரீட்சை 20 ஆம் வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இவ்­வாண்டு நடை­பெறும் க.பொ.த சாதா­ரண தரப் பரீட்­சைக்கு 3 இலட்­சத்து 84 ஆயிரம் பரீட்­சார்த்­திகள் தோற்­றுவர். இவர்­க ளில் 1 லட்­சத்து 96 ஆயி­ரத்து 100 தனிப்­ப ட்ட பரீட்­சார்த்­தி­களும் அடங்­குவர். இப்­ப­ரீட்சை நாடு­பூ­ரா­கவும் அமைக்­கப்­படும் 4 ஆயி­ரத்து 312 பரீட்சை நிலை­யங்­களில் நடை­பெ­ற­வுள்­ளது.