(ஜதி)
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்;வுல்லாஹ்வின் பன்முகப்படத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் நகர் பிரதேச கிராம அமைப்புக்களுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நேற்று (23.12.2013) பிரதேச செயலாளர் முஹமட் ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் பிரதம அதீதியாக கலந்து கொண்டு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்துக்கட்பட்ட கிராம அமைப்புக்களுக்கு பொருட்களை வழங்கிவைத்தார்.
இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தை அலங்கரிப்பதற்காக ரூபா 2 மில்லியன் நிதி ஒதுக்குவதாகவும் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எச்.நௌபிக்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் சபேஸ்,பிரதேச செயலக அதிகாரிகள்,விளையாட்டு கழக உறுப்பினர்கள்,கிராம அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












