(நடனம்)துறைநீலாவணை வாலிபர் கிறிஸ்தவ சங்கத்தின் ஒளி விழா நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை வாலிபர் கிறிஸ்தவ சங்கத்தின் பாலர் பாடசாலைக் கட்டிடத்தில் ஆசிரியர் த. கோகுலராஜ் தலைமயில் இடம்பெற்றது.
இதில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா, கிழக்குமாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா,கல்முனை மெதடிஸ்தன் திருச்சபை முகாமைத்துவக்குரு ஜே.டபிள்யு.ஜோகராஜா வாலிபர் கிறிஸ்தவ சங்கத்தின் செயலாளர் பாக்கியராஜா அதிபர் கு.மனோகரன் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர்களான ஆ.திருச்செல்வம் ,சுதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டதுடன் கிழக்குமாகாணசபை உறுப்பினர் வாலிபர் கிறிஸ்தவ சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.























