'விருட்சம்' சஞ்சிகை நூல் வெளியீடு விழா நேற்று (10.12.2013) கல்குடா கல்வி வலயத்தின் மிறாவோடை தமிழ் கலவன் பாடசாலையின் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பாடசாலையின் பரிசளிப்பு விழாவின்போது 'விருட்சம்' சஞ்சிகை நூல் வெளியீடு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை - சந்திரகாந்தன் அவர்கள் 'விருட்சம்' சஞ்சிகை நூலின் முதற்பிரதியினை பாடசாலையின் அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா , கோட்டக் கல்வி அதிகாரி என்.குணலிங்கம், கல்வி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதனை படத்தில் காணலாம்.
இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதி உரையாற்றுகையில் கல்வி ஒன்றே நம் செல்வம் இதை கருத்தில் கொண்டு மாணவர்கள் கற்றலில் ஈடுபடவேண்டும் பெற்றோரும் ஆசிரியர்களும் கரிசனையுடன் செயலாற்ற வேண்டும் என்பதுடன் இவ் விழாவிற்கு பங்களிப்பு செய்த பழைய மாணவரான திரு.கு.தவேந்திரன் (சுவிற்சலாந்து) போன்றோரது பாடசாலை மீதான அக்கறையை பாராட்டியதுடன் இவ்வாறு ஏனையோரும் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் தானும் இக்கிராமத்தினது அபிவிருத்திக்கு வருங்காலங்களில் அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும் அதன்மூலம் யுத்தத்தால் பாதிப்புற்ற இந்த பழந்தமிழ் கிராமத்தை கட்டியெழுப்ப முடியும் என்றார்














