அடுத்த வருட ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சிறந்த முடிவை எடுக்க வேண்டும் - கருணா அம்மான்

(பிரணி)

அடுத்த வருடம் இடம்பெறப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்கள்ளப்பு மாவட்ட மக்களாகிய நீங்கள் சிறந்த உறுதியான முடிவினை எடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை மீண்டும் ஜனாதிபதியாக்குவதன் மூலம் இம்மாவட்டத்தினை மேலும் வளமான மாவட்டமாக மாற்றமுயுடிம் என மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள நவகிரி நகர் கிராமத்திற்ககு உத்தியோகபூர்வமாக மின்சாரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மின்சார இணைப்பினை வழங்கிவிட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்

எமது நாட்டிலே பலமான எதிர்க்கட்சி ஒன்று இங்கு இல்லை எதிர்க் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி பல வழிகழிலும் சிறந்த தலைமைத்துவமின்றி பலமிழந்து நிற்கின்றது. இதனால் ரணில் விக்கிரம சிங்க அவர்களினால் ஜனாதிபதியாக வரமுடியாத நிலையில் இன்று காணப்படுகின்றது. எனவே அனைத்து சிங்கள பெறும்பான்மையான மக்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் பின் அணிதிரண்டு நிற்பதனால் அடுத்த முறையும் அவர் ஜனாதிபதியாவது உறுதியாகிவிட்டது. அதில் மாற்றுக்கருதுக்கே இடமில்லை

எனவே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் சார்பாகவோ அல்லது முஸ்லிம் மக்கள் சார்பாகவோ எவரும் இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரமுடியாது. என்றாலும் ஜனாதிபதியினை நிர்ணயிக்கின்றவர்களாக நாங்கள் காணப் படுகின்றோம். எனவேதான் தற்போதைய எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை மீண்டும் ஜனாதிபதியாக்குவதன் மூலம் எமது உரிமைகளைப் பெற்று வாழ்க்கையையும் வளமாக்கிக் கொள்ளலாம்.

நீங்கள் சென்றமுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு வாக்கழிக்கவில்லை மாறாக பல வழிகழிலும் இன்னல்களை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்தீர்கள். இருந்தும் எமது ஜனாதிபதி அசர்கள் பாரபட்சமின்றி அபிவிருத்தித் திட்டங்களை எமக்கு தந்து வருகின்றார்.

எனவே எதிர்காலத்திலாவது நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக வரும்போது இந்த மாவட்டத்தில் மின்சாரம் 40 வீதமாகத்தான் இடம்பெற்றிருந்தது. தற்போது அதனை 90 வீதமாக மாற்றியமைத்துள்ளேன். பட்டதாரி பயிலுனர்களுக்குரிய வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுத்தபோது அதனை தேர்தலுக்காக மேற்கொள்கின்றார் என விமர்சித்தனர். அதற்கான நிரந்தர நியமனத்தினையும் தற்போது பெற்றுக் கொடுத்துள்ளேன். இதன்போது எமது மாவட்டத்தில் 1800 பட்டதாரிகள் நியமனத்தினைப் பெற்று பயன்பெற்றுள்ளனர். எனவே சில விடயங்கள் பேசுவதற்கு நன்றாக இருக்கும்  காலத்திற்குப் பொருத்தமில்லததாகவே அமைகின்றது.

நமது மாவட்டம் மிகவும் வளமான மாவட்டம் ஆனால் இம்மாவட்டத்தில் வறுமையான மக்கள் வாழ்கின்ற மாவட்டமாகக காணப்படுகின்றது. இதற்கான வேலைத் திடங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் எதிர் கட்சியிலிருந்து எவற்றினையும் சாதிக் முடியாது ஒரு அமைப்பில் இருக்கின்ற போதுதான் இவற்றினை மேற்கொள்ள வேண்டும். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவராக இருக்கின்ற காரணத்தினால்தான் அதிகளவான நிதிகளைக் கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடிகின்றது.

கிழக்குமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எதிர்க் கட்சிக்கு அனுப்பியதன் மூலம் எவற்றினைப் மக்களாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள். எனவேதான் எதிர்வரும் காலத்தில் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

எங்கள் குழந்தைகளின் எதிர் காலம் நன்றாக அமைய வேண்டும் உங்களை நான் கடந்த அச்சமான காலத்திலிருந்து விடுவித்துள்ளேன். யுத்திலே அனைவரும் இழப்புத்தான். யுத்தத்தினால்; எனது ஒரே ஒரு அண்ணாவையும் நானும் இழந்துள்ளேன். இனிமேலும் அவ்வாறான நிலமை உருவாகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.