
கடந்த சில நாட்களாக வங்காளவிரிகுடாவில் காணப்பட்ட தாழமுக்கமானது தற்போது அயன மண்டல சூறாவளியாக (Tropical Cyclone)வலுவடைந்துள்ளது. இது தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்காக 330 கிலோமீற்றர் தூரத்திலும்,
திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 350 கிலோமீற்றர் தூரத்திலும் சென்னையிலிருந்து தென்கிழக்காக 530
கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகிறது. இது இலங்கையை விட்டு அப்பால் இந்தியாவை நோக்கி வடக்குத் திசையில் மிக
மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதன் தாக்கத்தினால் காற்றுடனான காலநிலை நாட்டிலும் சூழவுள்ள ஆழ்கடல் பிரதேசங்களிலும் முக்கியமாக மத்தியமலைப்பிரதேசத்தின் கிழக்கு சரிவுகளிலும் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடத்திய மாகாணங்களின் பல இடங்களில் இடையிடையேமழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் நாட்டின் அனேகமான
பகுதிகளில் இடியுடன்கூடிய மழை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் காற்றுடன்கூடிய மழை கொண்ட காலநிலை காணப்படும். முக்கியமாக பொத்துவில் முதல்மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஊடான மன்னார் வரையான ஆழ்கடல் பகுதிகளில் காற்றுடன்கூடிய மழை கொண்ட காலநிலைகாணப்படும். கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 கிலோமீற்றர் முதல்
50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசும்.
இந்தக் காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும். இதனால் இந்தக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் அபாயகரமானதாகவும் இருக்கும். ஏனைய ஆழ்கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.