மட்டக்களப்பு இருநூறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 73 வருடத்தின் பின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி தாண்டிய முதல் சாதனை


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், இருநூறுவில் உன்னிச்சை கிராமத்தில் இருநூறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ரசிக்காந்தன் நிதுஷாணி வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 135 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் தமது கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் பாடசாலை ஆரம்பித்து 73 வருடத்தின் பின் வெட்டுப்புள்ளி தாண்டிய முதல் மாணவி அத்தோடு அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர் பாடசாலையின் அதிபர் கு.பிரபாகரன் மேற்பார்வையில் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் இ.பிரபாரெத்தினம் இவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.

பாடசாலை சமூகம்