மட்டக்களப்பு கடலில் பிடிபட்ட பாரிய சுறா மீன்

(சிவம்) மட்டக்களப்பு முகத்தவாரக் கடலில்  சின்னத்தம்பி அமிர்தலிங்கம் என்கின்ற மீனவர் பாரிய சுறா மீன் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை காலை பிடித்துள்ளர்.

வட் லைன் தூண்டிலில் சுறா மீன் இனத்தின் மிக உயர்ந்த இனமான பெருவெண்ணயன் என்கின்ற இவ்மீன் 500 கிலோ நிறையை கொண்;ட மீன் 2 இலட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக மாவட்ட மீன்பிடி சமாச தலைவர் எஸ். பியதாச தெரிவித்தார்.

படகினுள் காணப்படும் பெட்டி போன்ற அமைப்பே வட்லைன் ஆகும். இம்மீனை பார்ப்பதற்காக அதிகளவான மக்கள் கடற்கரை நோக்கி செல்கின்றனர்.