மட்டக்களப்பு முகத்துவாரத்தில் தலைமைத்துவ, வாழ்வாதாரப் பயிற்சி முகாம்

(கௌரீஸ்)
மட்டக்களப்பு முகத்துவாரம் லைற்கவுஸ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களுக்கான தலைமைத்துவ,வாழ்வாதாரப் பயிற்சி செயலமர்வு லைற்கவுஸ் விளையாட்டுக் கழகத்தால் நிருவகிக்கப்படும் 'வாவி சூழல் கற்கை நிலையத்தில் ' கழகத் தலைவர் க.யோகலிங்கம் தலைமையில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடன் பாலமீன்மடு, திராய்மடு, முகத்துவாரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆலயங்களின் நிருவாகிகள்,மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகிய பலரும் கலந்து கொண்டார்கள். இதில் வளவாளர்களாக உளவளத் துறை ஆலோசகர்களான  அ.ஜெகநாதன் அவர்களும் எஸ்.ஜித்தன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் அவர்களும், கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.நேசதுரை அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.