நற்பிட்டிமுனையில் யானையின் அட்டகாசம். வீடுகள் சேதம்.

கல்முனை, நற்பிட்டிமுனையில் நேற்று இரவு யானைகள் மக்கள் குடியிருப்புகலினும் புகுந்து வீடுகளுக்கும், மதில்களுக்கும், வேளாண்மை, தோட்டங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளது. 

இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களுக்கு பிரதேச மக்களினால் அறிவிக்கப்பட்டது. அவ்விடத்துக்கு வந்த மாகாண சபை உறுப்பினர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டதுடன், நஷ்டஈடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார்.