(மா.சசி)
மண்முனை மேற்குப் பிரதேச கலாசார விழா நேற்று பிரதேச கலாசார பேரவையின் ஏற்பாட்டில் பேரவையின் தலைர் பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இவ் விழாவில் கலாசார பேரவையின் சஞ்சிகையான 'அகனி' சஞ்சிகையும் இவ் வருட கலாசார விழா சிறப்பு மலராக கலாசார விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் பயிற்சிப் பட்டறையினுடாக எழுதப்பட்ட சிறந்த கவிதைகள் மற்றும் கலாசார விழாவை மன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதை போட்டியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த கவிதைகள் அடங்கிய 'காடு' என்ற கவிதைத் தொகுப்பு மலர் வெளியிடப்பட்டது.
இதன் போது கன்னன்குடா கண்ணகி முத்தமிழ் மன்றத்தின் கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய வரலாறு கூறும் 'நந்தியின்' மகிமை தென்மோடி கூத்தும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக மாவட்ட கலாசார இணைப்பாளர் ரி.மலர்ச்செல்வன், மாவட்ட கலாசார உத்தியோகஸ்தா் எம்.ஏ.சீ.ஜெய்நுலாதீன்,வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் திட்ட முகாமையமளர் எல் ஆர்.டிலிமா,சிறுவர் நிதிய திட்ட அதிகாரி கே.நாகராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.