
(பேரின்பராஜா சபேஷ்)
யுத்தத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது உலகில் யுத்தம் நடைபெற்ற எந்த நாட்டையெடுத்துக் கொண்டாலும் இதுதான் நிலை தற்போது யுத்தம் முடிவடைநத நிலையில் அந்த உயிரிழப்புக்களைப் பேசுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது அரசியலுக்காக கீறல் விழுந்த இசைத்தட்டு போல் தனைப் பேசி வருகின்றார்கள் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.
'எமது பிரதேசத்தின் கல்வி கற்றவர்கள் அனைவருக்கும் அரசாங்க தொழில் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் பல தனியார் கம்பனிகள் இங்கு உருவாக்கப்படவுள்ளன. இன்னும் 20 ஆண்டுகளில் வெளிநாட்டிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறக்கூடிய வகையில் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் யுத்தம் மற்றும் சுனாமி ஏற்பட்டவேளைகளில் உலக உயவுத் திட்டத்தில் கையேந்தும் நிலை காணப்பட்டது. ஆனால் இன்று எமது நாட்டிலிருந்து அவர்களுக்கு அரிசி வழங்கும் நிலை உருவாகியுள்ளது.
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பல்கலைக் கழக மாணவர்களின் விடுதிகளுக்கு 15 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார வசதி மேம்பாடு என பல துறைக்ளுக்கு இம்முறை பல மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றையெல்லாம் பிழை பிடிப்பதற்கு எதிர்கட்சிகள் தயாராகவுள்ளன. உலகத்திலே மோம்பேறியானதும் இலகுவானதுமான விடயம் இருந்த இடத்தில் இருந்து கொண்டு பிழை பிடிப்பது இதனையே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டுவருகின்றனர்.
எமது நாட்டில் யுத்தம் நடைபெற்று நாகரீக மற்ற செயல்கள் அழிவுகள் கொலைகள் கடத்தல்கள் பல இயக்கங்கள் உருவாகி தற்போது ஒரு ஜனநாயக கொண்டுவரப்பட்டு நாகரீக அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியலுக்குள் நாங்களும் பங்காளிகளாகச் சேர்ந்தால் மாத்திரமே ஒரு நிறந்த மாற்றத்தை கொண்டுவரமுடியும். வெளிநாடுகளில் வன்முறைகளைக் காணமுடியாது. நாகரீகமான அரசியல் நடைபெறுகிறது மோதுவதானால் நிதானமாக ஒருவரையொருவர் பேசிக் கொள்வார்கள். மக்களைத் தூண்டாதவகையில் தமது அரசியலை நடார்துவார்கள். அதே அரசியல் நிலமை எமது பிரதேசங்களிலும் இடம்பெற வேண்டும்.
இன்னும் இன மோதல்களும் வார்த்தைப் பிரயோகங்களையும் மீண்டும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தமிழ் தேசிய தலைவர்கள் கத்துவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. இவர்களினால் எமது சமூகம் பின்னடைவை எதிநோக்கியது. அதற்காக மது உரிமைகளை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது
யுத்தம் நடைபெற்ற பின் பல குற்றச்சாட்டுக்கள் வரும் யுத்தம் என்றால் அதில் இரக்கம் பார்ப்பதென்பது பொய்யான விடயம் அதில் பல குற்றச்சாட்டுக்ள் வரலாம் அதனைப் பேசிப் பேசி காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பது வீணான விடயமாகும்.
வெளிநாட்டுத் தலைவர்கள் தங்களது அரசியலைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பல கருத்துக்களை வெளியிடுவார்கள் அதனால் எமது நாட்டில் ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. பொதுநலவாய நாடுகளில் மாநாடு நடைபெற்றது பாராட்டுக்குரிய விடயம் இதனை பலநொடுகள் பகிஷ்கரித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறிவருகிறது ஆனால் சகல நாடுகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்திய பிரதமர் வராமலிருந்தது அவர்களின் உள்வீட்டுப் பிரச்சினை தமிழ் நாட்டில் எதிர்ப்பு வெளியிட்டால் அவர் வரவில்லை. லன்டனிலுள்ள 90 ஆயிரம் தமிழ் வாக்குகளை கவருவதற்காக பிரதமர் டேவிட் கமரோன் யாழ்பாணத்திற்கு சென்றார். இவர்கள் குரல்கொடுப்பதனால் எமக்கு ஒரு மாற்றமும் ஏற்படாது.
அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் மாற்றத்தைக் கொண்டுவந்த காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சுமூகமான சூழல் காணப்படுகிறது இராணுவ கெடுபிடிகள் இல்லை. ஆனால் யாழ்பாணத்தில் ஆர்பாட்டங்கள் புரட்சி வெடிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேசுவதனால்தான்; இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளது. தமிழ் மக்களுக்கு கிடைக்கு அத்தனை சுதந்திரங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கிழக்கு மாகாண சபைக்கு ஒரு அமைச்சரை அனுப்பமுடியாதளவிற்கு மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து 11 பேரை அனுப்பியுள்ளீர்க்ள அவர்களால் என்ன செய்ய முடியும். அவர்கள் பத்திரிகைகளில் அறிக்கைவிடுவதால் எந்த மாற்றமும் இடம்பெறப் போவதில்லை' என்றார்'












